திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் பழைய சென்னை சாலையில் இயங்கிவரும் திருத்தணி சார்பதிவாளர் அலுவலகம்.

Advertisment

மலேசிய நாட்டைச் சேர்ந்த டத்து ராமேஸ்வரிக்குச் சொந்தமான பொன்பாடி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள 2 ஏக்கர் இடத்தை தனது உறவினரான திருவள்ளூரைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணிற்கு பவர் ஆப் அட்டர்னி எனப்படும் பொதுஅதிகாரம் வழங்க சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்துள்ளார்.

Advertisment

cc

இவர்களுக்கு திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஜனவரி 30, செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு பதிவுசெய்யப்படும் என்று டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் எல்லாம் சரிபார்த்தநிலையில் திருத்தணி சார்பதிவாளர் சுகன்யா வேறொரு பணிக்காகச் சென்றுவிட்டதாகச் சொல்லி, பல மணி நேரம் காத்திருக்கவைத்துள்ளனர்.

இரவு 7 மணி ஆனநிலையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கேட்ட தற்கு, "உங்கள் இடத்தை பொது அதிகாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மற்றொருவர் நோட்டீஸ் வழங்கியுள்ளார்'’என்று அலுவலக ஊழியர்கள் கூறியுள்ளனர், இன்றே பதிவுசெய்ய வேண்டுமென்றால் அதிகாரிகளைக் சிறப்பாகக் கவனித்தால் மட்டுமே முடியும் என்று லஞ்சம் கேட்க, இதனால் மனமுடைந்த டத்தோ ராமேஸ்வரி, கையில் பெட்ரோல் கேனுடன் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி திருத்தணி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரிடம் பேசியபோது, "மலேசியாவிலிருந்து பவர் ஆப் அட்டர்னி பதிவு செய்யவந்த என்னிடம் லஞ்சம் கேட்பது நியாயமா? நண்பகல் 12 மணிக்கு பதிவுசெய்வதாக டோக்கன் வழங்கிவிட்டு இரவு 9:30 வரை சுமார் 8 மணி நேரம் காக்கவைத்தனர். கணினி சர்வர் பிரச்சனைனு சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள். அன்றைய தினம் சுமார் 70 பத்திரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது, எங்கள் பத்திரம் ஏன் பதிவு செய்யவில்லை''’என்று கேள்வியெழுப்பினார்.

இந்த விவகாரம் பெரிதாகவே, இரவு 10 மணிக்கு சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் வேறுவழியின்றி 10 மணிக்கு மேல் பவர்ஆப் அட்டர்னி வழங்கினார்கள்.

cc

இது இப்படியென்றால், ஆர்.கே.பேட்டை அருகிலுள்ளது செல்லாதூர் கிராமம். இங்கு வசிப்பவர் ஆஞ்சநேயா. இவரது குடும்பம் நான்கு உறுப்பினர்களை யுடையது. அனைவரும் ஒன்றிணைந்து 70 சென்ட் நிலத்தை ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நரசிம்மன் என்பவ ருக்கு 2024-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி விற்பனை செய்துள்ளனர்.

Advertisment

இந்த இடத்தில் 16 வீட்டுமனைகள் போடப் பட்டுள்ளன. ரெஜிஸ்டர் செய்யப்பட்ட இந்த இடத்தின் சொத்து ஆவணத்தை நிலமதிப்பீடு செய்வதற்கு மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும் என்று சொத்து ஆவணத்தை ரெஜிஸ்டர் செய்த நிலத்தின் பத்திரத்தை வழங்காமல் சப் ரிஜிஸ்ட்ரர் செல்வ ராமச்சந்திரன் காலம்தாழ்த்தி வந்துள்ளார்.

இந்த பத்திரம் உடனடியாக வேண்டுமென்றால் ரூபாய் 50,000 லஞ்சம் வேண்டும் என்று இந்த இடத்திற்கு நிலத்தரகராகச் செயல்பட்ட மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கரிடம் கேட்டுள்ளார். உடனடியாக 35 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டு நிலத்தரகர் ஜெய்சங்கர் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. கலைச்செல்வத்திடம் புகார் செய்துள்ளார்.

cc

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய 35 ஆயிரம் ரூபாய்களை நிலத்தரகர் ஜெய்சங்கரிடம் கொடுத்தனுப்பியுள்ளனர். ஆர்.கே.பேட்டை சப் ரிஜிஸ்ட்ரர் செல்வ ராமச்சந்தரிடம் ஜெய்சங்கர் வழங்க, அவர் அந்தப் பணத்தை அலுவலகத்தில் தற்காலிகப் பணி யாளராக வேலைசெய்யும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் சிவலிங்கத்திடம் கொடுக்கக் கூறியுள்ளார். சிவலிங்கம் பணம் பெறும்பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. கலைச்செல்வம், லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் தமிழரசி, மலர் ஆகியோர் தலைமையிலான 15 போலீசார் கைது செய்தனர். சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் வைத்து ffநான்கு மணி நேரம் விசா ரணை மேற்கொண்டு திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பெயரில் இருவரையும் சிறையிலடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்ட சார்பதிவு அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சத்திற்கு முதல் காரணம், திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் பாவேந்தன் தான் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். தனது கட்டுப்பாட்டில் வரும் 14 சார்பதி வாளர்களிடம் மாதம் ஒரு லட்சம் முதல் வசூலிக்கப்படுகிறதாம். ஒரு கோடிக்கு மேலே செல்லும் அனைத்து ஆவணங் களுக்கும் தனியாக கட்டிங் வசூலிக்கப் படுகிறதாம். இதற்கு முன்பிருந்த பெண் அதிகாரி கொடுப்பதை வாங்கிக்கொண் டுள்ளார். தற்போதுள்ள மாவட்டப் பதி வாளரோ தினமும் பதிவாகும் ஆவணத் துக்கேற்ப வெளிப்படையாக சார்பதி வாளர்களிடம் பணம் கேட்டுவருகிறாராம். பணம் கொடுக்க காலதாமதம் ஏற்பட் டால் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கும் ஆய்வு என்ற பெயரில் சென்று மிரட்டி பணவசூலில் ஈடுபட்டு வருகிறாராம்.

இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டப் பதிவாளர் பாவேந்தனை தொடர்புகொள்ள, அவர் நமது அழைப்பைத் துண்டித்தார். பதிவுத்துறை உயர் பொறுப்பில் இருப்பவரின் ஆதரவே பாவேந்தனின் அசாதாரணப் போக்குக்குக் காரணம் என்கிறார்கள் அத்துறையினர்.